அவ்வப்போது துணை வேடங்களில் நடித்துவந்த இயக்குனர் பாக்யராஜ், நீண்ட நாளைக்குப்பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் ‘துணை முதல்வர்’. இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகனாக ஜெயராமும் நடித்திருக்கிறார்..
கதாநாயகிகளாக ஸ்வேதா மேனன், சந்தியா இருவரும் நடித்துள்ளார்கள். முதல்வராக மனோபாலா நடித்துள்ளார். பாக்யராஜ் கதை-வசனம் எழுத, அவரது சீடரான விவேகானந்தன் என்பவர் இயக்கியுள்ளார். அரசியல் படம் தான் என்றாலும் சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.