மிரட்ட வரும் ‘மதயானைக்கூட்டம்’.. அசத்தும் ட்ரெய்லர்..

ட்ரெய்லரே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுவது ஒருசில படங்களுக்குத்தான். அந்த வகையில் ஜீ.வி.பிரகாஷ் தயாரிப்பில், புதியவரான விக்ரம் சுகுமாறன் இயக்கியுள்ள ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் ட்ரெய்லர் காட்சிகளே படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என்கிற உணர்வை தோற்றுவிக்கின்றன.

புதுமுகம் கதிர் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஓவியா. தேனி மாவட்டத்தில் நடக்கும் கதைக்களத்தில் கேரளாவில் இருந்து தேனிக்கு வந்து நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவியாக நடித்திருக்கிறார் ஓவியா. கும்கி படத்தில் ஃபாரஸ்ட் ரேஞ்சராக நடித்த மலையாள நடிகர் ஸ்ரீஜித், ‘ஆரோகணம்’ விஜி இவர்களுடன் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

நேற்று இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்தை இயக்கியுள்ள விக்ரம் சுகுமாறன் பாலுமகேந்திராவின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். படத்தைப் பார்த்து பிரமித்துப்போன ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ்குமார் இந்தப்படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார்.

மேலும் இந்தப்படத்தின் மீது சதீஷ்குமார் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றால், இந்தப்படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாறனையும் ஹீரோ கதிரையும் தான் தயாரிக்கும் புதிய படத்திற்கு ஒப்பந்தம் செய்து, அட்வான்ஸும் கொடுத்துவிட்டார். மதயானைக்கூட்டம் விரைவில் வரப்போகிறது. ஒதுங்கி நின்று அவை ஆடப்போகும் ருத்ரதாண்டவத்தைக் காண தயாராக இருங்கள்.

Madha Yaanai Koottamமதயானைக்கூட்டம்
Comments (0)
Add Comment