போஸ்ட் புரொடக்சன் பணிகளான டப்பிங், ரெக்கார்டிங், மிக்சிங், அனைத்தும் ஒரே இடத்தில் செய்யும் வசதியுடன் சென்னை முகப்பேரில் உதயமாகியுள்ளது த்ரயா ஸ்டூடியோ. கடந்த ஜனவரி மாதம் பாடகி சித்ரா, உண்னிகிருஷ்னன் மற்றும் இசையமைப்பாளர் ஷிரத் இந்த ஸ்டூடியோவை திறந்து வைத்து. இது தனித்தன்மையுடம் மிகுந்த நவீனமாக தரமுடன் இருப்பதாக பாரட்டினர்.
‘ஜூலியும் நான்கு பேரும்’ படத்தின் இசையமைப்பாளர் ரகு சவன்குமார் சினிமா மீதான காதலால் ஒலியை துல்லியத்தன்மையுடன் உருவாக்க இந்த ஸ்டூடியோவை நிர்மாணித்திருக்கிறார். சென்னை முகப்பேரில் அமைந்துள்ள இந்த ஸ்டூடியோவில் மிகத்துல்லியமான சவுண்டை உருவாக்கும் உபகரணங்கள் உள்ளது. தற்போது பல படங்களின் வேலைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இங்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மிகப்பெரும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தன் கனவு ஸ்டூயோவை உருவாக்கியிருக்கிறார். ஒலி சம்மந்தமான ரெக்கார்டிங், ரீரெக்கார்டிங், மிக்ஸிங், மாஸ்டரிங் போன்ற எல்லா போஸ்ட் புரடக்ஷனஸ் வேலைகளுக்கு வெளியே எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் நடைபெறுவதற்கு ஏற்றவாறு இந்த ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இங்கே மிக்ககுறைந்த பட்ஜெட்டில் மிக நவீனமான தரமான போஸ்ட்புரடக்ஷன் வேலைகளை செய்து முடிக்க முடியும். இந்த ஸ்டூடியோவில் பெரிய நிறுவனக்களின் ஸ்டுடியோ போல் லைவ் ரெக்கார்டிங் செய்யும் வசதி உள்ளது.
வெகு குறைந்த காலத்தில் திரைப்பட தொழிநுட்ப கலைஞர்களின் நற்பெயர் பெற்றுள்ள இந்த ஸ்டூடியோ இப்போது பல படங்களுக்கு ஒலி வேலைகளை செய்து வருகிறது.