காதல் திருமணத்தில் வெற்றிகண்ட பெண் தயாரித்துள்ள படம் ‘தொட்ரா’..!

இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ள படம் ‘தொட்ரா’. நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்..

வீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சந்திராவின் கணவர் தான்.. தொட்ரா படத்தில் கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் எம்.எஸ்..குமார்.

“நாமதானே பணம் போடுறோம்? முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தால் என்ன? என்ற கேள்விதான் இன்று நிறைய புதியவர்களின் தவறாக உள்ளது. நான் அந்த தவறை செய்யத் தயாராக இல்லை. இயக்குநர் மதுராஜ் சொன்ன இந்தக்கதையில் எனது கேரக்டர் பிடித்திருந்தது. எனக்கு செட்டாகும் போலத் தோன்றியது. மற்றபடி கதைக்கு என்ன தேவைப்பட்டதோ அதை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டார் இயக்குநர் மதுராஜ்” என்கிறார் எம்.எஸ்.குமார்

இயக்குநர் பாக்கியராஜ் இந்த படம் பார்த்துவிட்டு இரவில் வீட்டிற்குச் சென்றபின் இவரை போனில் அழைத்து நன்றாக நடித்துள்ளீர்கள் எனப் பாராட்டியுள்ளார்.

“என் மனைவி சந்திரா தான் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.. ஜாதிவிட்டு ஜாதி மாறி காதல் திருமணம் செய்தவர்கள் நாங்கள். சினிமாவா? ஐயோ வேண்டாம் எனக் கதறுகிற பெண்களுக்கு மத்தியில் என்னை சினிமாவில் ஆளாக்க துணை நிற்கும் என் காதல் மனைவிக்கு நன்றி” என்கிறார் எம் எஸ் குமார்.

M S KumarMadhurajThodraஎம் எஸ் குமார்தொட்ராமதுராஜ்