இந்த வருடம் தமிழில் மஞ்சிமாவின் செல்வாக்கு தான்..!


பேபி ஷாலினி, காவ்யா மாதவன், நஸ்ரியா இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதாவது குழந்தை நட்சத்திரங்களாக நடித்து பின்னாளில் புகழ்பெற்ற ஹீரோயின்களாகவும் மாறியவர்கள்.. அந்தவரிசையில் கடந்த வருடம் வெளியான ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சிமா மோகனும் சிறுவயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வருகிறார்.

சினிமா இலக்கணப்படி மலையாளத்தில் அறிமுகமாகி இப்போது தமிழில் மையம் கொண்டிருக்கிறார். தமிழில் கௌதம் மேனன் டைரக்சனில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்பு ஜோடியாக வாய்ப்பு தேடிவர, அதிலும் நடித்து முடித்து விட்டார். அடுத்ததாக சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் மஞ்சிமா.

சமீபத்தில் தான் சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் உதயநிதியின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதல் படம் ரிலீசாகாததற்கு முன்பே அடுத்தடுத்து பெரிய படங்களில் இவர் கமிட் ஆகியுள்ளதை பார்த்தால் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது என்றே சொல்ல தோன்றுகிறது.

Acham Enbathu MadamiyadaManjimaS R PrabakarSimbuSundara PandiyanVikram Prabhu