பதினைந்து வருடங்களுக்கு முன் சரத்குமார் நடித்த அரசு, கம்பீரம் என ஆக்சன் படங்களை இயக்கிய சுரேஷ், இப்போது சுரேஷ் சண்முகமாக மாறி, திருப்பதிசாமி குடும்பம்’ என்கிற குடும்ப படத்தை இயக்கியுள்ளார்.. ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் அறிமுகமாகிறார். மற்றும் தேவதர்ஷினி, லஷ்மி ஐஸ்வர்யா கதையின் நாயகிகளாக நடிக்கின்றனர்.
ஒரு நடுத்தர குடும்பத் தலைவன் திருப்பதிசாமி, கால் டாக்சி டிரைவரான திருப்பதிசாமி, அவரது மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த குடும்பத்திற்கு ஒரு சின்ன தடங்கல். திருப்பதிசாமியின் பிள்ளைகளுக்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அந்த சந்தோஷக் குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே இந்தப்படத்தின் கதையாம்.
“ஜாலியான அதே சமயம் கனமான ஒரு உணர்வையும் இந்த திருப்பதிசாமி குடும்பத்து திரைக்கதை உருவாக்கும் மக்கள் மனதில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி தரும்” என்று நம்புகிறார் சுரேஷ் சண்முகம்.