நயன்தாரா இல்லாமல் நடைபெற்ற ‘திருநாள்’ இசைவெளியீடு..!

‘ஈ’ படத்தை தொடர்ந்து ஒன்பது வருடங்கள் கழித்து ஜீவா-நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ‘திருநாள்’. இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ளார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம். செந்தில்குமார் தயாரித்துள்ளார். இவர் சூப்பர்குட் பிலிம்சில் பல வருடங்களாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இப்படத்தின் பாடல்கள் நேற்று எளிமையாக வெளியிடப்பட்டன. அதைதொடர்ந்து ‘திருநாள்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்விலும் படத்தின் கதாநாயகியான நயன்தாரா கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் நாயகன் ஜீவா பேசும்போது, “இந்தப் படம் முழுக்க வேட்டியில்தான் வருகிறேன். நீண்டநாட்களாகவே லோக்கலாக இறங்கி படம் பண்ணவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி லோக்கலாக அமைந்த படம்தான் ‘திருநாள்’. படத்தின் இயக்குநர் ராம்நாத் திட்டமிட்டு எடுப்பவர் எல்லாவற்றிலும் தெளிவாக இருப்பவர்.

பொதுவாக படப்பிடிப்பில் எல்லாம் தினம் ஒரு பிரச்சினை வரும். படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்கு பிரச்சினை வரக்கூடாது. எந்தப் பிரச்சனையும் வராமல் இருந்தால்தான் நிம்மதியாக நன்றாக நடிக்க முடியும். இப்படத்தில் அப்படி எதுவும் தெரியவே இல்லை. நாங்கள் நிம்மதியாக நடித்தோம்” என கூறினார் ஜீவா.

JiivaNayantharaRamnathThirunaazh Press Meet News