வாக்காளருக்கான மரியாதையை பறைசாற்ற வரும் படம்…!

பிரபல இயக்குனர்கள் பி.வாசு, மகேந்திரன் ஆர்.வி.உதயகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் தி.இரமேஷ் பிரபாகரன்.. இவர் தற்போது ‘திரு.வாக்காளர்’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே கன்னடத்தில் கள்மஞ்சா என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார்.​ இவர் ஒரு வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அபி சரவணன் நடிக்கிறார். மேலும் 3 புதுமுகங்கள் நடிக்க உள்ளனர்.​

படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் “சட்டத்தாலும் சத்தத்தாலும் மட்டுமே வருவதல்ல மாற்றம்.. அது வாக்கு வாங்கும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் பொருந்தும் ஒவ்வொரு வாக்காளரும் திரு. வாக்காளர் ஆகவேண்டும் என்பதற்கான முயற்சியே இப்படம்” என கூறினார்.

Thiru Vaakkalarkalஅபி சரவணன்தி.இரமேஷ் பிரபாகரன்திரு.வாக்காளர்