‘வாயை மூடி பேசவும்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட இயக்குனர் பாலாஜி மோகன், தற்போது அதன் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நஸ்ரியா.
இந்தப்படத்தின் பாடல்கள் உரிமையை திங்க் மியூசிக்’ நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. சீன் ரோல்டன் என்பவர்தான் இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். முதலில் இந்தப்படத்திற்கு இசையமைக்க அனிருத்தை தான் ஒப்பந்தம் செய்தனர் பாலாஜி மோகனும் தயாரிப்பாளர் வருண் மணியனும்.
ஆனால் அனிருத் இந்தப்படத்தில் இருந்து விலகிக்கொள்ள அதன்பின்னர் தான் சீன் ரோல்டனை இசையமைக்க ஒப்பந்தம் செய்தனர். சசிகாந்த்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸும் இணைந்து இந்தப்படத்தை தயாரித்திருக்கிறது.