ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக அங்கீகாரம் பெற்ற ஸ்டுடியோ-9 ஆர்.கே.சுரேஷ் தற்போது ஒரு நடிகராகவும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.. ஒருபக்கம் வில்லனாக நடித்துக்கொண்டே இன்னொரு பில்லா பாண்டி, வேட்டை நாய் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் ஆர்.கே.சுரேஷ்.
இதை தொடர்ந்து தற்போது ‘தென்னாட்டான்’ என்கிற புதிய படத்தில் முற்றிலும் புதிய தோற்றத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஆர்.கே.சுரேஷ். புதுமுக இயக்குநர் எம்.விஜய் பாண்டி இயக்கும் இந்தப்படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடைபெற்றது. ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பைப் தொடங்குகிறார்கள்.