‘ஒருநாள் கூத்து’ – ‘ப்ரூஸ்லீ’ ; இப்போது தேனாண்டாள் பிலிம்ஸ் வசம்..!

‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தற்போது ‘ஒருநாள் கூத்து’ மற்றும் ‘புரூஸ்லீ’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டு உரிமையையும் தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.. இவற்றின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது..

‘ஒருநாள் கூத்து’ படத்தில் அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா, கருணாகரன், ரித்விகா என வளரும் நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.. நெல்சன் என்பவர் இதை இயக்கியுள்ளார். புரூஸ்லீ படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க பிரசாந்த் பாண்டிராஜ் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

Attakathi DineshBruce LeeG V Prakash KumarOru Naal koothuShri Thenandal Films