பிப்-5 ல் அசோக் செல்வனின் “தீனி” ட்ரெய்லர் ரிலீஸ் !


சூதுகவ்வும் படத்தில் அறிமுகமான அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க, கடந்த பிப்ரவரயில் காதலர் தின ரிலீஸாக ஓ மை கடவுளே படம் வெளியானது.. இந்தப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.. இந்தநிலையில் தற்போது அவரது நடிப்புக்கு தீனி போடும் விதமாக உருவாகியுள்ளது ‘தீனி’ என்றே டைட்டில் வைக்கப்பட்டுள்ள படம். இந்தப்படத்தின் ட்ரெய்லரும் கூட அதேபோல இந்த பிப்-5 அன்று வெளியாகிறது.

கதாநாயகிகளாக நித்யா மேனன், ரிது வர்மா நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குநர் அனி ஐ,வி.சசி இயக்கியுள்ளார். இவர் ரஜினி, கமல் ஆகியோரை வைத்து தமிழில் படம் இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ஐ.வி.சசியின் மகன். முழுக்க உணர்வுபூர்வமான காதல் காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இதை இயக்கியுள்ளார். பிரேமம் படத்தில் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்த ராஜேஷ் முருகேசன் தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, போஸ்ட் புரடகஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது..

ani iv sasiAshok Selvanasokh selvanIV SasiNithya MenonOh My KadavulePremamrajesh murugesanRitu VarmaSoodhu Kavvumtheenitheeni trailer