முடிவுக்கு வந்தது திரையரங்கு உரிமையாளர் போராட்டம்..!

கடந்த நான்கு நாட்களாக சினிமா ரசிகர்களுக்கு ஏக்கத்தையும் கோபத்தையும் தந்த, சினிமாவை வெறுப்பவர்களுக்கு சந்தோஷத்தை தந்த திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. நாளை (வெள்ளி) முதல் வழக்கம்போல திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகளுக்கு ஜிஎஸ்டி., உடன் தமிழக அரசு சார்பில் 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் உள்ள திரையங்கு உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து திரையுலகின் முக்கியஸ்தர்கள் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த மூன்று நாட்களாக எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று மாலை மீண்டும் அமைர்ச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஒரு சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக தியேட்டர்கள் ஸ்டிரைக்கு முடிவுக்கு வந்துள்ளது.

பேச்சுவார்த்தையின் சாராம்சமாக இனி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.120 டிக்கெட் கட்டணத்துடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. அதேசமயம் “கேளிக்கை வரி தொடர்பாக அரசு சார்பில் 6 பேர் கொண்ட குழு, எங்கள் சார்பில் 8 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவு எடுக்கப்படும்” என அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

G S TTheatresஜி எஸ் டிதிரையரங்கம்