திரையுலக வளர்ச்சி தொடர்பான விஷயங்களை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வரும் மே-30 முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார் விஷால். விஷாலின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், தங்களிடம் எதுவும் கலந்து பேசாமல் இந்த முடிவை அறிவித்திருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே தியேட்டர் அதிபர்களும் விநியோகஸ்தர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து ஒரு கூட்டறிக்கை இன்று வெளியிட்டுள்ளது. வருகின்ற 30 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வழக்கம்போல இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் வேலை நிறுத்த போராட்டத்தில் விஷாலுடன் அவர்கள் உடன்படவில்லை என்பது தெள்ளத்தெளிவாகி உள்ளது.