ரன், சண்டக்கோழி, பையா இது மூன்றிலுமே லிங்குசாமி வைத்திருந்த ஆக்ஷன் பிளாக், தமிழ்சினிமாவில் புதிதாக ஆக்ஷன் படம் எடுக்க வருபவர்களுக்கு ஒரு அரிச்சுவடி மாதிரித்தான். அதுதான் இப்போது ‘அஞ்சான்’ படத்தில் லிங்குசாமி, சூர்யாவை எந்த கோணத்தில் காட்டியிருக்கிறாரோ என்கிற எதிர்பார்ப்பையும் எகிறவைத்திருக்கிறது.
அதற்கேற்ற மாதிரி தீனி போடும் விதமாக பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் படமாகவே ‘அஞ்சான்’ உருவாகி இருக்கிறதாம். கடந்த புதன் கிழமை தொடங்கிய இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் ஞாயிறு வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
இது முடிந்ததும் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் படமாக்கப்படவேண்டுமாம். படத்தை ஆகஸ்ட் வெளியீடாக திரைக்கு கொண்டுவர தீயாக வேலை செய்கிறது மொத்த யூனிட்டும்.