கங்கை அமரன் தெரியும்.. ‘கலை’ அமரன் பற்றி தெரியுமா..?

பிரபல இயக்குனர் மணிரத்னம் படங்களில் ஏதாவது ஒரு துறையில் பணிபுரிவது திரைத்துறையுலகில் பணிபுரியும் அனைவருக்கும் ஒரு கனவாகும். அப்படி ஒரு கனவு நனவான மகிழ்ச்சியில் இருக்கிறார் கலை இயக்குனர் அமரன். ஆம்.. இவர் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை’ படத்திற்கு ஊட்டியில் எடுக்கப்பட்ட கட்சிகளின் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

இந்த வாய்ப்பு அமரனுக்கு எப்படி கிடைத்ததாம்..? பிரபல இயக்குனரும் வீணை வித்தவனுமாகிய காலம் சென்ற வீணை பாலச்சந்தருக்கு எடுக்கப்பட்ட விழாவிற்கு பின்புலம் அமைக்க கலை இயக்குனர் அமரனுக்கு வாய்ப்பு வந்தது. அந்த விழாவை தலைமை ஏற்று நடத்தியவர் மணிரத்தினம் தான்.

அவருக்கு அமரனின் வேலை பிடித்து போக, தான் இயக்கி கொண்டிருக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தில் அமரனை அழைத்து கலை இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.. இப்போது ஊட்டியில் எடுக்கப்பட்ட ஷெட்யூலின் மூலம் நிஜமாகவே கலை இயக்குனர் அமரனுக்கு கனவு நனவாகி விட்டது..