விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘24’ படத்தின் ரிலீசுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சயன்ஸ் பிக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக சமந்தா, நித்யா மேனன் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வரும் ஏப்-11ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த தீர்மானித்துள்ளர்கள். காலையில் இங்கே சென்னையில் இசைவெளியீட்டு விழாவை நடத்திவிட்டு, மாலையில் ஹைதராபாத்தில் இந்தப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான இசைவெளியீட்டை நடத்தவும் இருக்கிறார்களாம்.