கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘மெர்குரி’.. பிரபுதேவா கதாநாயகனாக, இல்லையில்லை வில்லனாக நடித்துள்ள இந்தப்படம் வசனங்களே இல்லாத படமாக உருவாகியுள்ளது. சமீப காலமாக தமிழ் திரையுலகில் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக இந்தப்படத்தை தமிழ் தவிர மற்ற மொழிகளில் கடந்த வெள்ளியன்று வெளியிட்டார் கார்த்திக் சுப்பராஜ்.
தற்போது போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வரும் வெள்ளிகிழமை முதல் படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் முதல் படமாக ‘மெர்க்குரி’ ரிலீஸாகிறது.. ஏற்கனவே ஆனலின் பைரசியில் மெர்க்குரி சிக்கியுள்ளதால் மேற்கொண்டு கார்த்திக் சுப்பராஜுக்கு நட்டம் ஏற்பட்டுவிட கூடாது என்பதால் அந்தப்படத்திற்கு ரிலீஸில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றனவாம்.