சிங்கமுக சூர்யாவின் மிரட்டும் லுக்கில் ‘S-III’


புலி வருது… ஸாரி.. சிங்கம் வருது.. சிங்கம் வருது என எதிர்பார்ப்பை எகிறவைத்துக்கொண்டிருந்த சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் இதோ ‘S-III’ என்கிற டைட்டில் சூட்டப்பட்டு பர்ஸ்ட் லுக்குடன் இனிதே ஆரம்பமாகிவிட்டது.. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

நகரெங்கும் சிங்கமுகத்துடன் கூடிய சூர்யாவின் போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது தான் நேற்றைய ஹாட் டாபிக். சிங்கமாக நின்றார் நடந்தார்.. சிங்கமாகவே மாறினார் என சூர்யாவுக்கு பாராட்டுக்கள் சோஷியல் மீடியாவில் குவிந்தவண்ணம் இருந்தன. சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த வெற்றியும் வரவேற்பும் அளவிடமுடியாதது..

இன்றைக்கும் சிங்கம் படத்தின் இரண்டு பாகங்களையும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும்போது, அதை மாற்ற மனமின்றி ரிமோட்டை தூக்கி ஓரமாக வைத்து விடுகிறார்கள் ‘சிங்கம்’ ரசிகர்கள். அந்த அளவுக்கு ஹரி—சூர்யா கூட்டணி இரண்டு படங்களிலும் உக்கிர தாண்டவம் ஆடியிருந்தது. மூன்றாம் பாகத்திலும் அது தொடரும் என உறுதியாக நம்பலாம்.

Actor SuryaS 3SingamSuryaஎஸ் 3சூர்யா