கடந்த ஆண்டு மார்ச்-8ஆம் தேதி அரசியல் கட்சிகளை ஓரங்கட்டி நிற்க வைத்து விட்டு ஈழத்தமிழர்களுக்காக காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் மாணவர்கள் தொடங்கியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.. ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக குரல் கொடுத்த தமிழக மாணவர்களின் இந்தப் போராட்டம் ‘அறப்போர்’ (violence) என்ற ஆவணப்படமாக உருவானது.
செங்கொடி மீடியா ஓர்க்ஸ் சி.கபிலன் தயாரிப்பில் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்த ஆவணப்படத்தை கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி இயக்குநர் அமீர் வெளியிட்டார்.
ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய மொழி சப் டைட்டிலில் உருவான ‘அறப்போர்’ ஆவணப்படம்’ சுவிட்ஸர்லாந்து நாட்டில் இரண்டு முறை திரையிடப்பட்டது.
இப்போது, கிரீஸ் நாட்டில் வரும் மார்ச் மாதம் 16-22ஆம் தேதி வரை நடைபெறும் 16வது சர்வதேச ஆவணப்பட விழாவில் திரையிடுவதற்கு இந்த ஆவணப்படம் தேர்வாகி உள்ளது.
இது தமிழக மாணவர்களின் போராட்டத்துக்குக் கிடைத்த மேலும் ஓர் அங்கீகாரம். உலகம் முழுவதும் இருந்து இந்த விழாவுக்கு வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் படைப்பாளிகளின் பார்வைக்கு ஈழத்தமிழகர்ளுக்கு நேர்ந்த துயரத்தைக் கொண்டு செல்ல கிடைத்த அரிய வாய்ப்பு இது என்றுதான் சொல்லவேண்டும்.