பெண் இயக்குனர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பிரபல இயக்குனர்..!

கடந்த வருடம் மாறுபட்ட கதை அமைப்பில் எடுக்கப்பட்டு, நல்ல விமர்சனங்களும், பாராட்டுக்களும் பெற்ற மலையாளப் படம் ‘மஞ்சாடிக்குரு’. பிருத்விராஜும் பத்மபிரியாவும் நடித்த இந்தப்படத்தை தயாரித்து, இயக்கியவர் அஞ்சலி மேனன்.

‘மஞ்சாடிக்குரு’ படத்தை தொடர்ந்து தற்போது அஞ்சலி மேனன் மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை நடிக்க வைத்து ‘பெங்களூரு டேய்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

‘மரியான்’ பார்வதி, நஸ்ரியா, நித்யா மேனன், இஷா தல்வார் என லட்டு மாதிரி நான்கு கதாநாயகிகள் நடிக்கும் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர் யார் தெரியுமா..?. கடந்த மாதம் தமிழில் ‘புலிவால்’ என்ற பெயரில் ரிலீஸான படத்தின் ஒரிஜினல் மலையாளமான ‘சாப்பா குரிசு’ படத்தை இயக்கியவர்.

மேலும் கடந்த வருடம் இரண்டு படங்களை இயக்கிய இவர் கொஞ்ச நாளைக்கு டைரக்‌ஷனை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப்படத்திற்காக மீண்டும் கேமராவை தூக்கியுள்ளார். அதுமட்டுமல்ல, மலையாள சினிமாவின் மெகாஹிட் படமான ‘ராஜமாணிக்கம்’ படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை தனது முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் பக்கா கமர்ஷியல் படமாக இயக்கி வருகிறாராம் அஞ்சலி மேனன். மே-9ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.

பின்குறிப்பு : இந்தப்படத்தில் நடிக்க ஆரம்பித்தபோதுதான் ஃபஹத் பாசில், நஸ்ரியா இருவருக்கும் காதல் மலர்ந்தது

Anjali MenonAnwar RazithBangalore DaysChappa KurishDulhar SalmanFahad FazilIsha TalwarMariyaan ParvathyNaziriya NazimNithya MenonNivin BaaliRaja Manickam
Comments (1)
Add Comment
  • slot olympus

    119214 945407very nice publish, i certainly love this web site, carry on it 904781