23 படங்களை இயக்கியவர் விக்ரமுக்கு வில்லனான விசித்திரம்..!

விக்ரம் இனி வருடக்கணக்கில் படங்களுக்காக நாட்களை ஒதுக்குவதில்லை என முடிவுசெய்துவிட்டார் போலத்தான் தெரிகிறது. அதுதான் கடந்த வருடம் கமல் கடைபிடித்த பாணிக்கு இவரையும் மாறவைத்திருக்கிறது. அந்தவகையில் தற்போது நடித்துவரும் ‘இருமுகன்’ படத்தை அடுத்து விக்ரம் ‘கருடா’ என்கிற படத்தில் உடனடியாக நடிக்க இருக்கிறார்..

ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் காஜலுக்கு கோவை மாவட்ட பெண் வேடம்.. இந்த மாதிரி கதாபாத்திரத்தில் இவர் நடிப்பது இதுவே முதன் முறை. வில்லனாக இந்தி இயக்குனரும் நடிகருமான மகேஷ் மஞ்சுரேகர் நடிக்கிறார். வாஸ்தவ், குருஷேத்ரா உட்பட 23 படங்கள் இயக்கி உள்ள இவர், ‘தபாங், வாண்டட், ஸ்லம் டாக் மில்லியனர், ரெடி போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.

படத்தை இயக்குகிறார் இயக்குனர் திரு. இவர் இயக்கும் 4வது படம் இது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல்-1ம் தேதி சென்னையில் துவங்குகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சென்னையை அடுத்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ, ஆகிய இடங்களிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடைபெற உள்ளது. பரபரப்பான ஆக்சன் படமாக கருடா உருவாகிறது.

Director ThiruKajal AgarwalKarudanMaju rekarVikram