மும்மொழி படங்களுக்குள்ள வித்தியாசம் என்ன..? விக்ரம் விளக்கம்..!


விக்ரமை பொறுத்தவரை கதையம்சம் உள்ள மலையாள படங்களில் நடிக்க அதிகம் ஆசைப்படுபவர். ஆனால் கால்ஷீட், மலையாள சினிமாவின் மினிமம் பட்ஜெட் மற்றும் அளவான பிசினஸ் என சில விஷயங்களால் அது இன்னும் விகரமுக்கு கைகூடாமலேயே இருக்கிறது. மலையாள சினிமாவை தான் ரசிப்பதற்கு கராணம் அங்கே ஹீரோயிச படங்களை விட கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் என்கிறார் விக்ரம்.

அதேசமயம் தெலுங்கு படங்களில் ஹீரோயிசம் மட்டுமே தூக்கலாக இருப்பதை ஒப்புக்கொள்ளும் விக்ரம், நம் தமிழ் ரசிகர்களை திருப்திப்படுத்துவது சாதாரணம் விஷயம் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறார். “நம் ரசிகர்களுக்கு படம் வித்தியாசமானதாகவும் இருக்கவேண்டும், அதேசமயம் தமிழ்சினிமாவுக்கான எல்லைக்கோட்டை தாண்டாமலும் இருக்கவேண்டும்” என்கிற விக்ரம் நம் ரசிகர்களின் பல்ஸை நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறார்.

10 EndradhukullaIVikramVikram Interview