அப்பப்பா.. ரஜினி அமேரிக்கா கிளம்பி போனபின் தான் எத்தனை வதந்திகள்.. அவருக்கு உடல்நிலை சரியில்லை.. சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் என நாகரிகமான வதந்திகளில் இருந்து நாராசமான வதந்தி வரை ஆளாளுக்கு கொட்டி தீர்த்துவிட்டார்கள்.. ரஜினியை போன்ற பிரபலங்களுக்கென பிரைவசியே இருக்க கூடாதா என்ன..?
நான் நன்றாக இருக்கிறேன் என தினசரி போட்டோவுடன் கூடிய ட்வீட் ஒன்றை போட்டுக்கொண்டு இருக்கவேண்டுமா என்ன..? ஆனாலும் இந்த வதந்திகளை மேற்கொண்டு வளரவிடாமல், அமெரிக்காவில் உள்ள சச்சிதானந்தர் கோவிலில் தானும் தனது தந்தையும் சாமி கும்பிடும் புகைப்படம் ஒன்று ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவால் வெளியிடப்பட்டு நம் ‘கபாலி’ நலமுடனே இருக்கிறார் என ரசிகர்களுக்கு இனிப்பு செய்தியை வழங்கியுள்ளது.
கபாலி’ திரைப்படம் வரும் ஜூலை-22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அனேகமாக வரும் 20ஆம் தேதி ரஜினி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.