வரும் பிப்-21ஆம் தேதி புதிய கட்சி தொடங்க இருக்கிறார் கமல். இதை முன்னிட்டு தலைவர்கள் பலரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார் கமல். இந்தநிலையில் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார் கமல்ஹாசன்
இது குறித்து கமல் கூறும்போது, “அரசியல் பயணத்துக்கு செல்வதால் எனக்கு பிடித்தவர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறேன்.. ரஜினிகாந்துடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை- மதுரை கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளேன்” என கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு பற்றி ரஜினி கூறியதாவது, “கமல்ஹாசன். அரசியல் பயணம் தொடங்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தேன்; பணத்துக்காகவோ, புகழுக்காகவோ கமல் அரசியலுக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆண்டவனின் ஆசிர்வாதம் கமலுக்கு கிடைக்க வேண்டுகிறேன்- என்னுடைய பாணி வேறு, கமல்ஹாசன் பாணி வேறு. மக்களுக்கு நல்லது செய்வது என்பதுதான் முக்கியம்” என கூறியுள்ளார்.