பெயரை மாற்றிக்கொண்டு பி.வாசு மகன் சொல்லித்தரும் ‘தற்காப்பு’..!

தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல உண்மை சம்பவங்களை மையப்படுத்தி புதிய கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘தற்காப்பு’.. இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் சக்திவேல் வாசு. புதிய நடிகரோ என குழம்பவேண்டாம். இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி தான் தனது பெயரை இப்படி மாற்றிக்கொண்டுள்ளார். இந்தப்படத்தில் சமுத்திரக்கனியும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

தற்காப்பு என்றால் தன்னை மட்டும் காத்துக்கொள்ளுவதைப் பற்றி பேசாமல், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை விளக்கும் விதமாக படத்தின் கதை சொல்லப்பட்டுள்ளதாம். தவறுதலாக நடைபெறும் ஒரு கொலையால் ஏற்படும் பிரச்சனைகளை மிக எதார்த்தமாக சொல்லும் திரைக்கதையால் உருவாக்கியுள்ளாராம் இந்தப்படத்தை இயக்கியுள்ள ஆர்.பி.ரவி.

சக்திவேல் வாசுசமுத்திரக்கனிதற்காப்புபி.வாசு