ரஜினியுடன் இணைந்து ‘கபாலி’ படத்தில் நடித்ததன் மூலம் கடந்த ஒரு வருடமாகவே ‘டாக் ஆப் தி டவுன்’ ஆக இருந்து வருகிறார் தன்ஷிகா. இப்போது கபாலி முடிந்துள்ள நிலையில் ‘காத்தாடி’ என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார்.. இதில் நடிகை ஸ்ரீதேவியின் உறவுக்கார பையனான அவிஷேக் என்பவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இதை தொடர்ந்து தன்ஷிகாவை கதையின் நாயகியாக வைத்து ‘ராணி’ என்கிற படம் உருவாக இருக்கிறது. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப்படத்தை சமுத்திரக்கனியின் சிஷ்யரான பாணி என்பவர் இயக்குகிறார்.. ‘கபாலி’ படத்திற்காக மலேசியாவில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தன்ஷிகா, இந்தப்படத்தின் கதைக்களமும் மலேசியா தான் என்பதால் மீண்டும் மலேசியா புறப்படுகிறார்.