மோகன்ராஜாவை வருத்தப்பட வைத்த தனி ஒருவன்..!

கடந்த வருடம் ஜெயம் ரவி இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு நாடறிந்த விஷயம். ஆனாலும் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் இந்தப்படம் குறித்த தனது மனக்குறை ஒன்றை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் மோகன்ராஜா.
இந்தப்படம் வெளியான பின்பு ஒரு நடிகராக ஹீரோவைவிட வில்லனாக நடித்த அரவிந்த்சாமிக்கு கிடைத்த வரவேற்பில் மோகன்ராஜாவுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் ஒரு படைப்பாளியாக மித்ரன் கேரக்டரை விட சித்தார்த் அபிமன்யு கேரக்டருக்கு கிடைத்த வரவேற்புதான் மோகன்ராஜாவை சங்கடப்படுத்தியதாம்.

வில்லனை இப்படி கொண்டாடுகிறார்களே.. தவறான ஒரு படத்தை எடுத்துவிட்டோமோ என சில நாட்கள் தூங்காமலேயே இருந்தாராம் மோகன்ராஜா. அதேசமயம் வில்லன் சித்தார்த் அபிமன்யு கொல்லப்பட்டதையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளத்தானே செய்தார்கள்.. ஆகவே நாம் நல்ல படம் தான் கொடுத்திருக்கிறோம் என்கிற மன நிம்மதி அதற்கப்புறம் தான் அவருக்கு ஏற்பட்டதாம்.

Jayam RaviMohan RajaThani Oruvanஅரவிந்தசாமிதனி ஒருவன்மோகன் ராஜா