இந்த வருடத்தில் தமிழ்சினிமாவின் பிளாக் பஸ்டர் படமான ‘தனி ஒருவன்’ வெற்றிகரமாக ஐம்பதாவது நாளை எட்டியுள்ளது. மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சுவாமி நடித்த இந்தப்படம் இதுநாள் வரை சுமார் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஏ.ஜி.எஸ் சினிமாஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் இந்தப்படத்தை தயாரித்திருந்தார்.
இந்தப்படத்தின் சிறப்பை கேள்விப்பட்ட ஹெச்.சி.எல் சேர்மன். ஷிவ் நாடார் இந்தப்படத்தை பார்க்க விரும்பினார். உடனே தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அவருக்காக பிரத்யேக காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து ‘தனி ஒருவன்’ படத்தை திரையிட்டு காட்டினார். படத்தை பார்த்த ஷிவ் நாடார் படத்தின் திரைக்கதையையும் மேக்கிங்கையும் சிலாகித்து பாராட்டியுள்ளார்.