கணவரின் கடிதத்தால் போராட்டத்தை கைவிட்டார் தாமரை..!

 

தன்னை விட்டு பிரிந்துசென்ற தனது கணவர் ‘தோழர் தியாகு’வை கண்டுபிடித்து தன்னுடன் இனைத்து வைக்கும்படி கடந்த எட்டு நாட்களாக சூளைமேடு, வேளச்சேரி, வள்ளுவர்கோட்டம் என மூன்று இடங்களில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினார் கவிஞர் தாமரை. இதற்கு ஒரு சில எழுத்தாளர்களும் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இப்போது இந்த போராட்டத்தில் திருப்பமாக, தாமரையின் கணவர் தியாகு, ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் தான் பிரிந்து சென்றதற்கு அழுத்தமான காரணங்கள் இருந்தது என்றும்  தற்போது இந்த பிரிவினாலும் தற்போது அனடத்திவரும் தர்ணா போராட்டத்தினாலும் தாமரைக்கும் தங்களது மகன் சமரனுக்கும் ஏற்பட்டிருக்கும் மன, உடல் வேதனைகளுக்கு மனம் வருந்துவதாகவும் கூறி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

இதை தொடர்ந்து தாமரையின் எட்டுநாள் தர்ணா போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த இருவருடனும் நெருங்கிய நட்பு பாராட்டிவரும் நண்பர்களான வழக்கறிஞர் அருள்மொழி மற்றும் ஓவியர் வீரசந்தனம் இருவரின் தலைமையில் நடுநிலையான விசாரணைக்குழு அமைத்து இந்த பிரச்சனையில் தீர்வு காணப்பட வேண்டும் என்கிற தாமரையின் கோரிக்கையை தியாகுவும் நண்பர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்

கவிஞர் தாமரைகவிஞர் தாமரை தர்ணாதாமரைதோழர் தியாகு