‘தலைமுறைகள்’ படம் கடந்த வருடத்திற்கான சிறந்த படமாக தேசியவிருது பெற்றது. ஆனால் அந்தப்படத்தை இயக்கிய அந்த மாமனிதர்தான் அதை பார்க்க கொடுத்துவைக்காமல் இப்பூவுலகை விட்டு சென்றுவிட்டார். ஆனால் ‘தலைமுறைகள்’ குழுவினரோ தாங்கள் நடித்த, பணியாற்றிய படத்திற்கு தேசியவிருது வாங்கித்தந்த தங்களது குருநாதருக்கு நன்றியும் அஞ்சலியும் செலுத்தும் வண்ணம் பிரசாத் லேப்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரான சசிகுமாருடன் நடிகர் சசி, ரயில் ரவி, வினோதினி, ரம்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பாலுமகேந்திராவின் படத்தின் முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது அஞ்சலியை செலுத்தினர். மேலும் மேடையில் பேசும்போது பாலுமகேந்திராவுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை நெகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டனர்.