சூர்யா பட ரசிகர் ஷோ டிக்கெட்டுகளை வெளியிட்ட மலையாள சினிமா பிரபலங்கள்..!


சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வரும் தைப்பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.. இங்கு மட்டும் அல்ல கேரளாவிலும் வெளியாகவுள்ள இந்தப்படத்திற்கு கேரளாவில் உள்ள சூர்யாவின் ரசிகர் மன்றத்தினர் இப்போதே ரசிகர் மன்ற டிக்கெட்டுகளை விநியோகிக்க ஆரம்பித்து விட்டார்கள்..

முதல்நாள் ரசிகர் மன்ற ஸ்பெஷல் ஷோவுக்கான டிக்கெட்டை கேரளாவின் வெவ்வேறு பகுதி ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்கள், வெவ்வேறு மலையாள திரையுலக பிரபலங்களை வைத்து வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் வடகரா ரசிகர் மன்ற ஷோ டிக்கெட்டை இளம் நாயகன் டொவினோ தாமஸ் துவக்கி வைத்துள்ளார்.

இதேபோல புலி முருகன் பட இயக்குனர் வைசாக், நடிகை அனு சித்தாரா, நடிகர்கள் நீரஜ் மாதவ், இர்ஷாத் ஆகியோரும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ரசிகர் ஷோ டிக்கெட்டை அறிமுகப்படுத்தி விற்பனையை துவக்கி வைத்துள்ளனர்.

Keerthy SureshSuriyaThaana Serntha KootamVignesh Sivanகீர்த்தி சுரேஷ்..!சூர்யாதானா சேர்ந்த கூட்டம்