தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தநிலையில் சூர்யாவின் பிறந்தநாளான நேற்று அவரது பிறந்தநாளை பெருமைப்படுத்தும் விதமாகவும் அவரது ரசிகர்களை சந்தோசப்படுத்தும் விதமாகவும் தற்போது அவர் நடித்துவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
லுங்கி கட்டிக்கொண்டு மேஜையில் கையை ஊன்றி சூர்யா நிற்பது போலவும், ஆனால் அந்த மேஜையின் கான்னடியில் சூர்யாவின் மாடர்ன் லுக் பிரதிபலிப்பது போலவும் உருவாக்கப்பட்டுள்ள போஸ்டரே படஹ்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டுவதாக இருக்கிறது. இதை தொடர்ந்து வரும் ஜூலை-27ஆம் தேதி இந்தப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாக இருப்பதாகவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்