நெகடிவ் ரோலில் நடிக்க தயங்காத ‘தரமணி’ லிஸி ஆண்டனி

< கதாநாயகிகள் சுலபமாக கிடைத்து விடுவார்கள்.. ஆனால் கேரக்டர் ரோல்களில் நடிக்கும் குணச்சித்திர நடிகைகள் கிடைப்பது என்பது ரொம்பவே அரிதான விஷயம். அந்தவகையில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'தரமணி' படத்தில் போலீஸ் அதிகாரியான ஜே.சதிஷ் குமாரின் மன அழுத்தமுள்ள மனைவியாக வந்து கடைசியில் சுடப்பட்டு இறந்து போகும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஸி ஆண்டனி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறார். இவருக்கு பூர்வீகம் கேரளா என்றாலும் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான். அதுவும் வட சென்னை வண்ணாரப்பேட்டை. அப்பா விமானப்படையில், நேவியில் இருந்ததால், இவருக்கும் பிற்காலத்தில் ஆகாயத்தில் பறக்கவும் கப்பல் மாலுமி ஆகவும் ஆசை ஏற்பட்டதில் வியப்பில்லை. ஆனால் ஷிப்பிங்கில் ஈடுபட்ட இவர், இந்தியாவை விட்டு புறப்பட்டதும் நான் மொத்தமாக மாறியதுடன் தனக்குள் இருந்த இன்னொரு மனுஷியைக் கண்டுபிடித்தார். இந்தியா வந்ததும் இயக்குனர் ராமுடன் ஏற்பட்ட நட்பில் 'தங்க மீன்கள்' படத்தில் ஸ்டெல்லா மிஸ் பாத்திரத்தில் நடித்ததும் பலரும் இவரை ஸ்டெல்லா மிஸ் என்று அழைக்க ஆரம்பித்தனர். ராமே இப்போதும் அப்படித்தான் அழைப்பாரம். . இப்படியான நட்பில் பிறகு சிறு சிறு வேடங்களில் சுமார் 15 படங்கள் நடித்திருக்கும் இவருக்கு. இப்போது தரமணியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. “'தரமணி' படத்தில் பெண்களின் பிரச்சினைகளை, குமுறல்களை, வலிகளை, ஏக்கங்களை தைரியமாகச் சொல்லியிருக்கிறார் ராம். இது பலரும் சொல்லத் தயங்கும் பிரச்சினையாகும். பெண்களின் மனக்குரலை அவர் பேசியிருக்கிறார் .அவர் குரலை ஒரு பெண்ணாக நான் வழிமொழிகிறேன்." என்கிற லிசியின் கைவசம் . 'பேரன்பு', 'சூ மந்திரக்காளி' , மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள் ', 'மூடர் கூடம்' ஒளிப்பதிவாளர் டோனி இயக்கும் படம் மேலும் ஒரு புதிய படம் என ஐந்து புதிய படங்கள் வைத்திருக்கிறார். “நடிக்கும் பாத்திரத்தின் நீளம் அளவு பற்றி எனக்குக் கவலையில்லை. பாசிடிவ் நெகடிவ் பற்றிப் பயமில்லை. ஒரு காட்சியில் வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிய வேண்டும்" என்கிறார் லிஸி ஆண்டனி.

'சூ மந்திரக்காளி'Lizzy AntonyTaramaniதரமணிபரியேறும் பெருமாள்பேரன்புமூடர் கூடம்லிஸி ஆண்டனி