“லாரன்ஸ் எனக்கு ஸ்கிரிப்ட்டே தரவில்லை” – டாப்ஸி

காஞ்சனா-2 வில் தன்னால் முடிந்தவரை ரசிகர்களை மிரட்டிவிட்டார் டாப்ஸி.. பொதுவாக பேய்ப்படங்களுக்காண ஸ்கிரிப்ட் என்பது பேப்பரில் எழுதும்போது ஒருவிதமாக இருக்கும். ஆனால் படமாக்கும்போதும், பின்னணி இசை, ஸ்பெஷல் எபக்ட்ஸ் எல்லாமும் சேர்ந்ததும் தான் அதன் முழு வடிவமும் நமக்கு மிரட்டலாக கிடைக்கும்.

அதனாலேயே இந்தப்படத்தில் டாப்ஸியை ஒப்பந்தம் செய்யப்போன லாரன்ஸ் அவருக்கு கதையை மட்டுமே சொன்னவர், ஸ்கிரிப்ட் எதையும் கொடுக்கவில்லையாம். அதனாலேயே ஸ்பாட்டிலும் ஸ்கிரிப்ட்டை படிக்காமல், லாரன்ஸ் சொல்லிக்கொடுத்தபடியே நடித்தாராம் டாப்ஸி. அதனால் தான் தனது நடிப்பு வித்தியாசமாக இருந்ததாக பாராட்டுக்கள் குவிவதாக சந்தோஷப்படுகிறார் டாப்ஸி.

காஞ்சனா-2டாப்ஸி