கெஸ்ட் ரோலில் நடிப்பது, ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடிவிட்டுப் போவது இதிலெல்லாம் தனக்கு உடன்பாடு இல்லை என அவ்வப்போது சொல்லிவந்தார் டாப்ஸி..ஆனால் அழைப்பவர் அழைத்தால் மாட்டேன் என சொல்லிவிடத்தான் முடியுமா என்ன..? ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிவரும் ‘வை ராஜா வை’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதும் அப்படித்தான்.
கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த்தை வைத்து தான் இயக்கி வரும் இந்தப்படத்தில் கொஞ்ச நேரமே வந்துபோகும் கெஸ்ட் ரோலில் டாப்ஸி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என நினைத்த ஐஸ்வர்யா, டாப்ஸியிடம் கேட்க, அவரோ முதலில் தயக்கம் காட்டியிருக்கிறார்.
ஆனால் ஐஸ்வர்யாவோ டாப்ஸியிடம் முழுக்கதையையும் கூறி, அதில் டாப்ஸி நடிக்க இருக்கும் கேரக்டரின் முக்கியத்துவத்தை விளக்கியதோடு அதில் டாப்ஸி நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்கிற தனது உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்பின் அந்தப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்ல டாப்ஸி ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ளவில்லையாம்.. இரண்டே நாட்களில் யெஸ் என சம்மதம் சொல்லிவிட்டாராம்.
880264 832159Hiya! Great blog! I happen to be a everyday visitor to your website (somewhat much more like addict ) of this site. Just wanted to say I appreciate your blogs and am looking forward for a lot more to come! 568929