கடந்த சில வருடங்களுக்கு முன் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்சினிமாவின் முக்கியமான படங்களின் காட்சிகளை இமிடேட் செய்து ‘ஸ்பூப்’ வகைப்படமாக உருவாகியிருந்த இந்தப்படத்தை இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கி இருந்தார்.
தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘தமிழ்படம் 2.O’ என்கிற படம் உருவாக இருக்கிறது. இந்தப்படத்தையும் சி.எஸ்.அமுதனே இயக்குகிறார். ஆனால் இந்தப்படம் மக்கள் மனதில் பதிந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இமிடேட் செய்து உருவாக இருக்கிறது..
நேற்று முன்தினம் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ஒரு போஸ்டர் இதை உறுதிப்படுத்துகிறது. வெள்ளை உடையில் சிவா தியானம் செய்வது போன்ற காட்சியுடன் வெளியான போஸ்டரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
அதுமட்டுமல்ல இந்தப்படம் வரும் மே-25ல் தியேட்டர்களில் ரிலீசாக இருப்பதாகவும் மே-26ல் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தில் ரிலீஸாகிவிடும் என்றும் கிண்டலான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த திஷா பாண்டேவும் நடிக்கிறார்.