தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் ஜே.எஸ்.கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனம், நேற்று தமிழக அரசாங்கம் அறிவித்து இருந்த மாநில விருதுகள் 10 விருதுகளை பெற்று இருக்கிறது.
அவை பின் வருமாறு..
சிறந்த படம் (2014) – குற்றம் கடிதல்
சிறந்த படம் (2வது) 2013 – தங்கமீன்கள்
சிறந்த இயக்குனர் (2013) – ராம் (தங்கமீன்கள்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் (2013) – சாதனா (தங்கமீன்கள்)
சிறந்த பாடலாசிரியர் (2013) – நா.முத்துக்குமார் (தங்கமீன்கள்)
சிறந்த நடிகர் (2013) – விஜய்சேதுபதி (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)
சிறந்த படத்தொகுப்பாளர் (2013) – லியோ ஜான் பால் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)
சிறந்த படத்தொகுப்பாளர் (2012) – தாஸ் (பரதேசி)
சிறந்த பின்னணி பாடகி (2012) – திவ்யா (பரதேசி)
சிறந்த கலை இயக்குனர் (2012) – பாலசந்தர் (பரதேசி)
இந்த விருதுகள் கிடைத்தது பற்றி ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் தனது அளவில்லாத மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“என்னுடைய திரை உலக பயணத்தில் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாகும். பல்வேறு தேசிய, சர்வதேச விருதுகள் என்னுடைய படங்கள் மூலம் பெற்று இருந்தாலும், நம் தாய் தமிழ் நாட்டின் விருதுகள் கிடைக்க பெற்றதில் பேரானந்தம். நிறுவனம் துவங்கிய சில வருடங்களில் விருதுகள் பல வென்றது எங்களது நிறுவனத்துக்கும் எனக்கும் பொறுப்பு உணர்ச்சியை அதிகம் கூட்டுகிறது” என கூறியுள்ளார்.