சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘கத்தி சண்டை’ படத்தை இயக்கியிருந்தார் சுராஜ்.. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சுராஜ் தனது படங்களின் ஹீரோயின்கள் பற்றியும் அவர்களுக்கு தான் கொடுத்து அணிய சொல்லும் கவ்ரச்சியான ஆடைகளை பற்றியும் கர்வமாக பகிர்ந்துகொண்டார்.
இது அந்தப்படத்தில் நடித்த தமன்னாவை மட்டுமல்ல, சக நடிகையான நயந்தாராவையும் கோபம் கொள்ள வைத்துவிட்டது.. நடிகைகள் என்றால் என்ன நினைத்தீர்கள் என இருவருமே டிவிட்டர் மூலமாக இயக்குனர் சுராஜுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்..
உடனே பிரச்சனையின் வீரியத்தை தணிக்கும் விதமாக, தமன்னா உள்ளிட்ட நடிகைகளுக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்துடன் தான் எதுவும் கூறவில்லை என்றும், அப்படி தான் கூறியது அவர்களை வருத்தப்படுத்தி இருந்தால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார் இயக்குனர் சுராஜ்.