இந்தப்படத்தில் அதர்வா தடகள விளையாட்டு வீரராக வருகிறார். “இரண்டு வருடத்துக்கு முன்னாடி அதர்வாவை மனசுல வச்சு உருவாக்கின கதைதான் ‘ஈட்டி’. இந்தப் படத்தோட கதையும், களமும் தமிழ் சினிமாவுக்கு புதுசா இருக்கும்! இன்னைக்கு இந்தியா பல துறைகள்ல முன்னேறியிருக்கு. ஆனா, ஸ்போர்ட்ஸை பொறுத்தவரை இன்னும் பின்தங்கிதான் இருக்கு! அந்த வகையில் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்கிற மாதிரியான ஒரு சப்ஜெக்ட்டை கையில் எடுத்திருக்கோம்” என்கிறார் ரவி அரசு
குறிப்பாக தமிழ்நாட்டு விளையாட்டு துறை கவனிக்கிற மாதிரியான ஒரு படமாக ’ஈட்டி’ அமையும் என்கிறார் ரவி அரசு நம்பிக்கையுடன். அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் ஸ்ரீதிவ்யா. படத்துக்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ் அதற்குள்ளாகவே மூன்று பாடல்களை போட்டுக் கொடுத்திருக்கிறாராம். ஜனவரியில் இருந்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.