தாங்கள் சம்பாதித்த பணத்தை முன்புபோல ரியல் எஸ்டேட்டுகளில் மட்டும் முதலீடு செய்கின்ற தங்களது வியாபார எல்லையை தாண்டி, இன்று இணையதள வர்த்தகத்திலும் நடிகைகள் இறங்க ஆரம்பித்துவிட்டனர். கடந்தமாதம் நடிகை தமன்னா ஒயிட் அன்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றை ஆன்லைனில் தொடங்கினார்.
அதேபோல மலையாள நடிகை காவ்யா மாதவனும் விரைவில் ஆன்லைன் பிசினசில் குதிக்க இருக்கிறார். இதற்காக தனியாக ஒரு இணையதளம் ஒன்றை ஆரம்பிக்கும் காவ்யா மாதவன், அதில் முழுக்க பெண்களுக்கான, பெண்கள் விரும்பும் பொருட்களை மட்டும் வியாபாரம் செய்ய இருக்கிறாராம்.
அடுத்து இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்க இருப்பவர் காஞ்சனா பொண்ணு டாப்ஸி பன்னு. இவர் கால் வைக்கவிருக்கும் ஏரியா திருமண பந்தங்களை உருவாக்கும் ‘வெட்டிங் பிளான்’ என்கிற ஆன்லைன் திருமண பேக்டரி தான். தனது தங்கை மற்றும் தனது தோழியுடன் இணைந்து இதனை நடத்த இருக்கிறார் டாப்ஸி.