ஒவ்வொரு இயக்குனருக்கும் தங்களது படங்களுக்காகன கரு ஏதாவது ஓர் சம்பவத்தின் மூலம் கிடைத்திருக்கலாம்.. இன்னும் சிலருக்கோ தங்களது படத்தை இயக்க யாரோ ஒருவர் தூண்டுதலாக இருந்திருக்கலாம். சுசீந்திரன் இயக்கத்தில் நாளை வெளியாகவிருக்கிற படம் ‘மாவீரன் கிட்டு’ படமும் அப்படி ஒரு நபரின் தூண்டுதலால் உருவானதுதானாம்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்சில் சுசீந்திரனை சந்தித்த ஒரு ரசிகர் அவரிடம் உரிமையாக, ‘சார், ஒரு தமிழனாய் நாங்க எல்லாம் பெருமைப்படுகிற மாதிரி ஒரு படம் பண்ணுங்க’ என்றாராம். அன்று முதல் பல நேரங்களில் அவர் கூறிய அந்த வார்த்தை சுசீந்திரனை யோசிக்க வைத்ததாம். அப்படி உருவானது தான் இந்த ‘மாவீரன் கிட்டு’ படம்.
விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இப்படம் இந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான ஒரு திரைப்படமாக இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். நான் ஒரு தமிழனாய் இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கு பெருமை கொள்கிறேன் என்கிற சுசீந்திரன் இத்திரைப்படம் உருவாக காரணமாக இருந்த அந்த ரசிகருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.