முதலில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கை பார்த்துவிடுவோம். இயக்குனர் பாலாவின் முதல் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்தார். இரண்டாவது படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்தார். மூன்றாவது படமான பிதாமகனில் விக்ரம், சூர்யா இருவரும் கதாநாயகர்களாக நடித்தார்கள்.
அதேபோல தனது முதல் படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய விமலையும் மூன்றாவது படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயனையும் கதாநாயகர்களாக வைத்துத்தான் தனது நான்காவது படமான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வை இயக்கினார் டைரக்டர் பாண்டிராஜ்.
இதேபாணியைத்தான் தற்போது இயக்குனர் சீனுராமசாமியும் பின்பற்றி தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப்படத்தில் சீனு இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ பட ஹீரோவான விஜய் சேதுபதியும் அடுத்து அவர் இயக்கிய ‘நீர்ப்பறவை’ படத்தின் ஹீரோவான விஷ்ணுவும் இணைந்து நடிக்கிறார்கள்.
தங்களுக்கு தமிழ்சினிமாவில் ஒரு முகவரி தந்த இயக்குனர்கள் மீண்டும் தங்களது படங்களில் நடிக்க அழைக்கும்போது என்ன ஏது என்று காரணம்கூட கேட்காமல் ஓடிவந்து நடித்து கொடுக்கிறார்கள் இதுபோன்ற சில நடிகர்கள். இதைத்தான் ‘குருபக்தி’ என்பார்கள்.
சரி ஃப்ளாஸ்பேக் போதும்.. விஷயத்திற்கு வருவோம். இப்போது சுசீந்திரனும் இவர்களது வழியை பின்பற்றி தற்போது தான் இயக்கிவரும் படமான ‘ஜீவா’வில் விஷாலையும் விஷ்ணுவையும் வைத்து இயக்கி வருகிறார். ஏற்கனவே இவரது டைரக்ஷனில் ‘வெண்ணிலா கபடி குழு’வில் விஷ்ணுவும் ‘பாண்டிய நாடு’ படத்தில் விஷாலும் நடித்திருந்தனர்.
டைட்டில் ரோலான ‘ஜீவா’ கேரக்டரில் விஷ்ணு நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இந்தப்படத்தின் பின்புலமாக கிரிக்கெட் விளையாட்டை கையில் எடுத்துள்ளார் சுசீந்திரன். விஷ்ணுவும் விஷாலும் நட்சத்திர கிரிக்கெட்டான சிசிஎல்லில் மிக நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து நடிப்பது எவளவு பொருத்தம் பார்த்தீர்களா..?