ஜன-26ல் சூர்யாவின் சி-3 ரிலீஸாவது உறுதி..!

திட்டமிட்டபடி எல்லாமே நடந்துவிட்டால் அப்புறம் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது.. சூர்யா நடித்துள்ள ‘சி-௩’ பத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதிலும் அதுதான் நடந்தது.. பிரதமர் மோடி, செல்லாத நோட்டு நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்பே சூர்யாவின் படம் டிச-16ஆம் தேதி என அறிவித்தார்கள்…

ஆனால் அதன்பின்னர் கருப்பு பண நடவடிக்கை காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது.. அதில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் முதலமைச்சர் ஜெயலிதா இறந்த சோகம் தாக்கியது.. அந்த சோகம் மறைவதற்குள் வார்தா புயல் சென்னையை புரட்டிப்போட்டது..

இந்த மனநிலையில் மக்கள் பணம் செலவழித்து தியேட்டருக்கு வந்து முழுமனதுடன் படம் பார்க்க நாளாகும் என்றுதான் டிச-23ஆம் தேதி அறிவித்திருந்த சூர்யாவின் ‘சி-3’ பட ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.. ஆனால் இந்தமுறை ஜன-26ஆம் தேதி குடியரசு தின கொண்டாட்டமாக படம் வெளியாவதை உறுதி செய்துள்ளார் சூர்யா..

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் தான் என்பதை ‘சி-3’ நிச்சயமாக நிரூபிக்கும்.

HariS 3Singam 3Suryaஎஸ் 3சூர்யாஹரி