சிங்கம்-2 படத்தில் வில்லனாக நடித்தவர் ரகுமான், அப்போது ஏற்பட்ட நட்பின் பேரில் தான் தனது தயாரிப்பான ’36 வயதினிலே’ படத்தில் ஜோதிகாவுக்கு கணவராக நடிக்க ரகுமானை அணுகினார் சூர்யா. அவரும் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டார். அதேபோல அந்தப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வரை வந்து கலந்துகொண்டார் ரகுமான்.
தற்போது மலையாளத்தில் ‘லாவெண்டர்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுமான். இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு ரகுமான் மரியாதையை நிமித்தம் சூர்யாவை அழைக்க, எந்த மறுப்பும் சொல்லாமல் வர உடனே ஒப்புக்கொண்ட சூர்யா, சொன்னபடி நேற்று கொச்சின் வந்தார்.
கொச்சின் லுலு மாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த சூர்யாவைக்காண மாலின் உள்ளேயும் வெளியேயும் கேரளா ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.. தன்னை பார்த்து ஆரவாரத்துடன் கையசைத்த ரசிகர்களுக்கு பதில் வணக்கம் சொன்ன சூர்யா, ரகுமானையும் படக்குழுவினரையும் வாழ்த்தி பேசினார். சூர்யாவின் வருகையால் ரகுமான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது அவரது முகத்தில் நன்றாகவே பிரதிபலித்தது.