அஜித், விஜய் இருவரும் டபுள் ஆக்சன் ரோல் பண்ணியதோடு அதில் ஒரு கேரக்டரில் வில்லனாக நடித்தும் தங்களது கனவை நிறைவேற்றிக்கொண்டார்கள்.. ஆனால் சூர்யாவுக்கு மட்டும் வில்லன் ரோல் என்பது இதுநாள்வரை கனவாக இருந்து வந்தது.. வில்லனுக்கான கதைக்களமும் கேரக்டரும் அவரை தேடி வரவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அந்த குறையை தற்போது விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘24’ படம் போக்கியுள்ளது. இந்தப்படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வரும் சூர்யாவுக்கு அதில் ஒன்றுதான் ‘ஆத்ரேயா’ என்கிற பவர்புல் வில்லன் கேரக்டர்..
நடித்தால் இப்படி ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிக்கவேண்டும் என காத்திருந்து, இத்தனை நாளாக ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று சொல்லும் விதமாக அந்த கேரக்டரில் அனுபவித்து நடித்து வருகிறாராம் சூர்யா. சூர்யாவின் கதாபாத்திரங்களில் இந்த ஆத்ரேயா கேரக்டர் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்கிறார் இயக்குனர் விக்ரம் கே.குமார்.