3 ட்ரக்குகளில் கேரளாவுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய சூர்யா ரசிகர்கள்..!

கடந்த இரண்டு வாரா காலமாக மழையும் அதனை தொடர்ந்து பெருவெள்ளமும் கேரளாவை பாடாய் படுத்தி எடுத்து வருகிறது. சொந்த ஊரிலேயே அகதிகள் போல மக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. தமிழகத்தில் இருந்து பெரிய அளவில் நிவாரண நிதியும் நிவாரண பொருட்களும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இது ஒருபக்கம் இருக்க சூர்யா, விஜய் ரசிகர்கள் எல்லாம் கேரளாவிலேயே காலத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கேரளாவில் சூர்யாவுக்கு ரசிகர்கள் மிக அதிகம். அவர்களுடைய நிவாரண பணியை துரிதப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டிலிருந்து சூர்யா ரசிகர் மன்றம் மூலமாக மூன்று ட்ரக்குகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலைக்குள் கேரளாவை அவை சென்றைடைந்து விடும்.. நாளை முதல் அந்த பொருட்களை சூர்யா ரசிகர் மன்றத்தினர் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விநியோகிக்க இருக்கின்றனர்.

கேரளாசூர்யாவிஜய்