“கடமையாற்றுவதை உதவி செய்வதாக நினைக்காதீர்கள்” – சூர்யா ஆலோசனை..!

நடந்து முடிந்த நடிகர்சங்க தேர்தலில் வென்று, பாண்டவர் அணி பொறுப்புகளை கைப்பற்றியுள்ளது. சங்கத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்போது, அதை உதவியாக நினைக்காமல் உங்கள் கடமை என நினைத்து இதயத்திலிருந்து நேசித்து செய்யுங்கள் என வென்றவர்களுக்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துக்களையும் கூடவே சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

“கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது விரும்பத்தகாத தனி மனித தாக்குதல்களும், ஒற்றுமையாக இருப்ப்போம் என சொல்லிக்கொண்டே ஜாதி, மொழி என பிரித்தாளும் தேவையில்லாத சில நிகழ்வுகளும் நடந்தன. மூத்த கலைஞர்கள் மரியாதை குறைவாக பேசப்பட்டனர். படத்தின் வெற்றி தோல்விகளை வைத்து கேலிசெய்தனர். ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள நீங்கள் பகைமை மறந்து அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்… கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுங்கள்” என வாழ்த்துகளுடன் மிகச்சரியான ஆலோசனைகளையும் கூறியுள்ளார் சூர்யா.

சூர்யா