சூர்யா செல்வாராகவன் காம்பினேஷனில் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறது சூர்யாவின் 36வது திரைப்படம். ஏற்கனவே இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பும், பாடல் பதிவும் நிறைவடைந்துவிட்ட நிலையில் விரைவில் துவங்கவுள்ள இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தற்போது தயாராகி வருகிறது.
இந்தப்படத்துக்காக சுமார் 3கோடி ரூபாய் பொருட்செலவில் அம்பாசமுத்திரம் நகரத்தை போன்ற மிகபிரமாண்டமான செட் ஒன்று சென்னையில் இரவு – பகலாக உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆர்ட் டிபார்ட்மென்டை சேர்ந்த 220க்கும் மேற்பட்டவர்கள் இதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு இந்த செட்டில் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படத்துக்கு இந்தப்படத்தில் கதாநாயகிகளாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்