ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்..!

 

சமீபத்தில் சூர்யா நடிப்பில் மாசு என்கிற மாசிலாமணி படம் வெளியானது. இந்தப்படம் தொடர்பாக சூர்யாவின் ரசிகர்கள் சிலர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுடன் மோதல்போக்கை கடைபிடிப்பதாக சூர்யாவின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது…

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “என்னுடைய ரசிகர்களும் நலம் விரும்பிகளும் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் சண்டையிடுவதை நான் விரும்பவில்லை. பெற்றோர்களுடன் நீண்ட நேரம் செலவிட்டு அவர்களை பெருமைப்படும் விதமாக நடந்துகொள்வதையே நான் விரும்புகிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் சூர்யா.

சமீபத்தில் நடிகர் பாலிவுட் நடிகர் சல்மான் கூட தனது ரசிகர்களிடம் ஆமிர்கான் மற்றும் சல்மான் ரசிகர்களுடன் மோதல் வேண்டாம் என கோரிக்கை வைத்து செய்தி வெளியிட்டிருந்தார். அந்த செய்தியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து மேற்கோள் காட்டி ரசிகர்களிடம் சூர்யா கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்ஆமிர்கான்சல்மான்சூர்யாமாசு என்கிற மாசிலாமணிவிஜய்